உதைத்திருந்தாலும்

image:thanks google, click to go to site

நேற்று வரை
உதை உதை என்று
உதைத்திருந்தாலும்

இன்று
உயிரே உயிரே என்று
மார்போடு அணைக்கிறாள்
பிரசவித்த தாய் 

36 கருத்துகள்:

  1. மிகவும் அருமை ... கவிதை புரிந்ததால்தான் அருமை என்று பாராட்டி இருக்கிறேன் கருத்துக்கும் சேர்த்துதான்

    பதிலளிநீக்கு
  2. பதிவர் போட்டில் பரிசு பெற்றதில் இருந்து எனக்கு இன்னும் பங்கு வந்து சேரவில்லை.....ஞாபகத்தில் வைச்சுக்கோங்க.....சீக்கிரம் வரலைன்னா வட்டியோட வசூலிக்கப்படும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. அம்மான்னா சும்மாவாம்மா...

    பதிலளிநீக்கு
  4. ஆண்ட்டி...வணக்கம்...உங்கள் வலை தளத்தில் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு வயதில்லை. ஆனால் நான் வந்து பார்த்தேன் என்று தெரிவிக்கவே இந்தப் பதிவு...என் வலை தளம் வாருங்கள்...http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! உன் வருகை மகிழ்ச்சி ராகசூரியா ..நன்றி.
      கண்டிப்பாக வருகிறேன்

      நீக்கு
  5. இதுதான் சுகமான சுமைகள் அருமை சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  6. தாய்மையை உணர்த்திய அற்புதமான கவிதை!
    த ம 3

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! அன்பு! தாய்மை! அதற்கு நிகர் உண்டோ!!?

    பதிலளிநீக்கு
  8. ““நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
    தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
    கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்““““

    என்று சொன்ன பட்டினத்தார் நினைவு வந்து போகிறார்.

    அன்பின் கவிதை அருமை.

    தொடர்கிறேன்

    த ம எப்போதும் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அருமையான பாடல்..பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அண்ணா.

      கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி

      நீக்கு
  9. அம்மா..! அது மட்டுமா? நட்புக்கு நட்பாய், உறவுக்கு உறவாய், அன்புக்கு அன்பாய்.. எல்லாமுமாய்.. விக்ரமன் பட கதாப்பாத்திரம் போல் நல்லதை மட்டும் எண்ணும் ஒரே ஜீவன்!! #பீலிங்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஆவி..அம்மாவை நன்கு புரிந்துகொண்ட அன்பான மகனின் பீலிங்ஸ் புரிகிறது.

      நீக்கு
  10. சூப்பர் சூப்பர் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  11. உள்ளிருந்து உதைத்தாலும் தாங்கிக் கொள்கிறாள்.. வெளியிலிருந்து உதைத்தாலும் வாங்கிக் கொள்கிறாள்.. தாய்மைக்கு ஏது இணை இத்தரணியில்.. அழகான கவி வரிகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  12. இதற்கும் சேர்த்துத்தான் “பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்று சொல்லிவைத்தார்கள். சின்னக்கவிதைன்னாலும், வண்ணக்கவிதை. தினமணி “கவிதைமணி“ பகுதிக்கு கவிதைகள் அனுப்பிவைக்கலாமே பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா.
      அப்படியா, அனுப்புகிறேன் அண்ணா . மனமார்ந்த நன்றி

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...