எனக்காகவே என்னை நேசி

சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம் முயற்சி செய்தேன்...இதோ உங்களுக்காக..

என் கண்களுக்காக என்னை நேசிக்காதே
ஒரு நாள் அவை ஒளி இழக்கக் கூடும்;
என் புன்னகைக்காக என்னை நேசிக்காதே
இன்று அது வசீகரமானதாய் இருக்கலாம்
ஆனால் அப்படியே நிலைக்குமா என்று அஞ்சுகிறேன்;
என் கன்னக் குழிகளை நேசிக்கிறேன் என்று சொல்லாதே
வயதோடு அது மங்கி மறைந்து விடலாம்;
என் அன்பே! நேசத்தின் நித்தியத்திற்காகவும்
எனக்காகவும் மட்டுமே என்னை நேசி!
நான் அப்படித் தான் உன்னை நேசிக்கிறேன்!


9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. :), ஆனால் ரொம்ப நாள் முன்னாடி எழுதியது..உங்களுக்கு தெரியுமே ஸ்ரீனி!

      நீக்கு
    2. yes yes.. naan tamilaakathai pattri sonnen :-).... english kavithai theriyumae :)

      நீக்கு
  2. கிருஷ்ணம்மாள் சுப்பையா6 பிப்ரவரி, 2013 அன்று AM 3:51

    உன்னை நேசிக்கும்

    என்னை நேசி

    வேஷம் இல்லாது

    துவேஷம் இல்லாது

    நேசம் காட்ட

    நீயும் யோசி

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணம்மாள் சுப்பையா6 பிப்ரவரி, 2013 அன்று AM 3:56

    நேசிப்பின் ஆழம் புரிய வைக்கும் முயற்சி நன்று

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...